தோழர் தியாகு எழுதுகிறார் : கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு
(தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள் – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (2)(அ.2.) கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு இஃது எல்லாராலும் முடிவதில்லை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்த நடவடிக்கைகளால் பொறியியல் தோழருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னால் எங்களிடம், ‘ஒவ்வொருவரையாக அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலைக்குள் ஒரு பகுதி நிலச்சுவான்தார்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும்’ என்பார். கபித்தலம் மூப்பனாரில் தொடங்கி பூண்டி வாண்டையார் வரை இருபதுக்கும் மேற்பட்ட நிலச்சுவான்தார்கள் பெயரையும் ஒரே இரவில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 33: ஏ. எம். கே. (10)
(தோழர் தியாகு எழுதுகிறார் 32 தொடர்ச்சி) பிரிந்தவர் கூடி. . . தோழர் ஏ.எம். கோதண்டராமனின் வழிகாட்டுதலில் ஓராண்டுக் காலத்துக்கு மேல் இயக்கப் பணி ஆற்றியவன் நான். நாங்கள் பல முறை சேர்ந்து பயணம் செய்தோம் என்றால், பல கல் தொலைவு வயல் வரப்புகளில் நடந்து சென்றோம் என்று பொருள். நாங்கள் பல முறை சேர்ந்து உணவருந்தினோம் என்றால், பல நாள் சேர்ந்தே பட்டினி கிடந்தோம் என்றோ, நாலணாப் பொட்டுக் கடலையும் குவளை நீரும் பகிர்ந்து பசியாறினோம் என்றோ பொருள். இன்ப துன்பங்களில் பங்கேற்றல் என்றல்லவா சொல்வார்கள்? இங்கு துன்பங்கள்…