கொழும்பு மகசீன் சிறையில் அரசியல் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிவ. ஆருரன் எழுதிய “யாழிசை” என்ற குமுகாயப் புதினம்(சமூக நாவல்) கனடாவில் ஞாயிற்றுக் கிழமை  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 அன்று வெளியிடப்பட உள்ளது. இனத்தின் வலியைச் சுமந்து சிறையில் துன்புற்று வாழும் இந்த நூலாசிரியரின் சிறைக்குள் இருந்து மலரும் இசையாக இந்த யாழிசை கடல் கடந்தும் உலகத் தமிழ் உறவுகளின் உள்ளங்களைத் தொட வெளிவந்துள்ளது. சிறை வாழ்வில் இனி ஏது வாழ்வு என நொடிந்து துன்புறும் சிறை…