விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

  விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்?  காஞ்சி மாநகருக்குக் களங்கம் எற்படுத்தும் வகையில்  அமைந்ததுதான்  காமகோடி மடம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே புகழுறும் மடம் இது. எப்படி ஆரிய மொழியின் காலத்தை முன்னுக்குத்தள்ளி ஏமாற்றுகிறார்களோ – எவ்வாறு தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துவிட்டு அவற்றைத் தமிழ் இலக்கியக் காலத்திற்கு முந்தையன எனக் காட்டுகின்றார்களோ – அப்படித்தான்  இம்மடத்தின் தொன்மைக் கற்பிதமும். பிற மடங்களாலேயே இம்மடம் பிற்பட்டது எனவும் 1821 இல்  கும்பகோணத்தில்  தொடங்கப்பெற்ற மடமே 1842 இற்குப்பின்னர் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது…

தேனிமாவட்டத்தில் தேசியக்கொடியை ஏற்றியவுடனேயே கீழே இறக்கிய ஊழியர்கள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் குடியரசு நாள் கொண்டாடினார்கள். அப்பொழுது தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக்கொடி சரியாகக் கட்டப்படாததால் கொடி பறக்கவில்லை. மேலும் முடிச்சு அவிழவில்லை. இதனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை மீண்டும் கீழே இறக்கிப் பேரூராட்சி ஊழியர்கள் கொடியைச் சரிசெய்து மீண்டும் ஏற்றினார்கள். உயிரினும் மேலான தேசியக்கொடியை ஏற்றுவதற்குப் பலவித நிபந்தனைகளும், பல்வேறு சட்டதிட்டங்களும் உள்ளன. எனவே இனிவரும் காலங்களில் தேசியக்கொடி ஏற்றுவதில் மிகுந்த கவனத்துடன்…