அவளும் அப்படித்தான்! – பவித்திரா நந்தகுமார்
அவளும் அப்படித்தான்! அம்மா முத்தமிட தந்தை பாசமாய் வருடி விட தமையன் தங்காள் செல்லச் சண்டையிட பள்ளி சென்று வந்த நங்கைதான் இவள் அவளும் அப்படித்தான் சென்றாள் தமையன் வீடு வரவில்லை என ஏங்கியவள் தொடராகத் தங்கையவளை உயிரற்ற உடலாய் ஆடையின்றிக் கண்டவள் தகப்பனின் உயிர்த் துடிப்பை அறிந்தவள் அப்படித்தான் அவளும் சென்றாள் குடும்பம் எண்ணாமல் தன் இனம் காக்க…. வெறுத்து விடவில்லை அவள் கடும் பயிற்சி கண்டு சோர்ந்து விடவில்லை அவள் இலட்சியக் கொள்கை ஆயுதம் கையில் எடுத்தாள் உடன் தோழிகளோடு மணக்கோலம்…