தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு?
(தோழர் தியாகு எழுதுகிறார் 5 இன் தொடர்ச்சி) துவாலு தெரியுமா உங்களுக்கு? துவாலு தெரியுமா உங்களுக்கு? சில நாள் முன்னதாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். இது ஒரு நாட்டின் பெயர். நேற்று ஐநா மனிதவுரிமைப் பேரவையில் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) என்ற திட்டத்தில் இந்தியாவின் முறை. அந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலிருந்து நேரலையாகக் காணும் வாய்ப்பை மக்கள் கண்காணிப்பகம் ஏற்படுத்திக் கொடுத்தது. மொழிபெயர்ப்பாளனாக நான் பங்காற்றினேன். அப்போது தூதுவர்களின் இருக்கையில் நாடுகளின் பெயர்களை எழுதி வைத்திருக்கக் கண்டேன். என் கண்ணில் அந்தப் பெயர் பட்டது….