புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம், நூற்பயன் 31-37
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 26-30 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 31-37 31.கொடுமை யாமனுக் கோதுடை யாரியக் கடிமை வாழ்வி னழுந்துவார்க் கென்செயும்? அடிமை வாழ்வி னகன்று விடுதலை அடைய மேவுந் தமிழர்க்கி தாகுமே. 32.தமிழர் தாழ்வு தனையெடுத் தோதியே தமிழர் வாழ்வு தனைநிலை நாட்டலான் தமிழ ரென்னு முணர்வு தலைப்படும் தமிழர் யாரும் தலைக்கொளு வாரரோ. ++ மேவுதல்–விரும்புதல் ++ 33.கோதி லாத குழந்தை குதலையைத் தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்? ஈது நந்தமி ழின்கதை யேயிதை ஓது நாவனு முங்கள்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம் 26-30
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 21-25 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 26-30 26. மனையறத்தின் வகையமை காதலர் தனை நிகர்த்தவர் தம்மைத் தெரிவுறத் தினைநி கர்த்தள வேனுஞ் செயும்பயன் பனைநி கர்த்தவின் பத்தினைப் போற்றுவாம். அவை யடக்கம் 27. ஏசு வார்சிலர்; ஈதுண்மை யேயெனப் பேசு வார்சிலர்; பேச வெதிர்மனங் கூசு வார்சிலர்; கூக்குர லார்சிலர்; மாசி லாத்தமிழ் மாக்கதை கேட்கினே. 28. வழியெ தென்னும்; வரன்முறை மாற்றிய பழிய தென்னும்; பகைகொ டுரைவசை மொழிய தென்னு; முறைமை யிலாதவிஃ…