கருத்துக் கதிர்கள் 06-08 – இலக்குவனார் திருவள்ளுவன் [06. திருமாவளவன் அவை நடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]
கருத்துக் கதிர்கள் 06-08 : [06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!] 06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக அவை நடத்துநர் பட்டிப்பு (Panel of Chairpersons) உருவாக்குவர். பதின்மருக்குக் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஒழிவிடமானால், இவர்கள் அந்த இடத்திற்கு…