பண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும் – அ.கி.பரந்தாமன்

பண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும்   தமிழர்கள் ஏன் பிற மக்களும் பண்பாட்டை அடைய வேண்டுமானால், பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கும் ஒப்புயர்வற்ற அருந்தமிழ் மறையாகிய திருக்குறளைப் பயில வேண்டும். வள்ளுவர் பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கியவர் என்பதை அவரது திருக்குறளால் நன்குணரலாம். அவர் இளமை தொட்டே கருத்து வளம் மிக்க நூல்கள் பல பயின்று, அறமனப்பான்மையுடன் குடும்பத்தோடு வாழ்ந்து, குழந்தைகள் மீதும் தாயின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மீதும் தணியாத அன்பு கொண்டு, நாம் வாழ, நல்லுலகம் வாழ, நமது…

தாய் மொழியிலேயே எல்லாம்! – பேரறிஞர் அண்ணா

தாய் மொழியிலேயே எல்லாம்!   தமிழ்நாட்டார் மட்டுமே வேற்றுமொழியில் பாடுவதைக் கேட்கின்றனர். தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் வளர்ச்சி பெற்று வருகின்றனர்; இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போலத் தாய்மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காணமுடியாது. பேரறிஞர் அண்ணா : தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18

மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்

    அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.)   செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…

அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து

– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில் சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம் பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ, பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய், ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட, இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி! எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி! இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும் என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும் அந்த இந்தி வெறியாளர் அதுபுகுந்து சிறக்க ஆனபல வழிமிகவும் ஆற்றுவது கண்டே அந்த நிலை…

இந்நாட்டு மும்மணிகள் – பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

    தமிழகத்தில் வாழும் நம்முள்ளத்தில் செப்டம்பர் திங்களில் தோன்றித் திகழும் செம்மல்களான மும்மணிகள், நம்நாட்டுப்புதுமைக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும் மூடக் கொள்கைகளில் முடங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்த ஈ.வே.இரா.பெரியாரும், அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு அழிவு தோன்றும் நேரத்தில் முன்வந்து தமிழ்காக்க முனைந்து நிற்கும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். முன்னவர் ஆங்கிலர்க்கு அடிமைப்பட்டு நாட்டை மறந்து தமிழ்மொழியை மறந்து கிடந்த தமிழர்களுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண்டாக்கியவர் ஈ. வே.இரா.பெரியாரோ நம்மக்கள் மூடக் கொள்கையிலிருந்து விடுதலையடையப் பன்னெடுங் காலமாகத் தொண்டாற்றி வருபவர். அறிஞர் அண்ணா…

பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி

இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி                 எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம்                 மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம் நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள்                 நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள் உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே,                 உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே. – பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்