வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 :: இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4  தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி (பிள்ளை) தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்த பேரா.சே.சி. கண்ணப்பனார் கட்டுரை  8 ஆவதாக இடம் பெற்றுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் 20 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியிருந்தாலும் வாணாள் முழுவதும் தமிழ் ஆர்வலராகத் திகழ்ந்தார்; தமிழறிஞரான இவர் அறிஞர் போப்பு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்; சமய இலக்கியங்களையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மாக்சு முல்லர் முதலான பன்னாட்டு அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் என இவரின் சிறப்புகளைக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார். இவரின் திருக்குறள் பணிகளை…

தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார் – அ.க.நவநீதக்கிருட்டிணன்

தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க! என்று நீபாடு தமிழ்வெல்க! தமிழ்வெல்க! என்றுதினம் ஆடு தமிழை அழிப்பாரைத் தலைதுணிக்க ஓடு தமிழைப் பழிப்பாரைத் தவிடாகச் சாடு தமிழர்கள் உலகிலே தனியரசு கண்டார் தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார். – திருக்குறள் மணி அ.க.நவநீதக்கிருட்டிணன்

பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே உண்டு! – அ.க.நவநீதகிருட்டிணன்

மக்கள் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே உண்டு!   இனிமை நலங் கொழிக்கும் இன்பத் தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைந்திருப்பது போன்று, எந்த மொழிக்கும் அமையவில்லை என்பது பன்மொழி அறிந்தார் திருந்திய கருத்தாகும். தமிழில் உள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என்னும் ஐவகை இலக்கணங்களுள் நடுவணதாகிய பொருள் இலக்கணம் எந்தப் பிறமொழிக்கும் இல்லாத தனிச்சிறப்புடையது.   இது நாகரிகமிக்கத் தமிழர்தம் நல்வாழ்வு முறைகளை வகுத்துரைக்கின்றது. இங்ஙனம் மக்கள் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே…