அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே!- இலக்குவனார் திருவள்ளுவன்
அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே! நீதிமன்றத் தீர்ப்புகள் கருத்தாய்விற்கு உட்பட்டனவே. அவ்வாறு கூறும் பொழுது தீர்ப்புரையை அலுவல் பணியாகக் கருதவேண்டுமே தவிரத் தனிவாழ்வுடன் இணைத்துச் சொல்லக் கூடாது. அஃதாவது தீர்ப்பின் நிறைகுறைகளைக் கூறுகையில் தீர்ப்பாளருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கூறக்கூடாது. இந்த அடிப்படையில் எல்லாத் தீர்ப்புகளும் மேலாய்விற்கு உட்பட்டனவே. தீரப்புகள் சொல்லப்பட்ட சூழலில் தவறுகளுக்கு ஆளானவையாக இருக்கலாம். அதனால்தான் மேல்முறையீடுகள் வருகின்றன. மேல் முறையீட்டில் முந்தைய தீர்ப்புகள் தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டு மாற்றப்படுகின்றன. எனவே, தீர்ப்புகளை மறைவாக்குகளாகக் கருதி ஒன்றும் சொல்லக்கூடாது என்பதல்ல. அண்மையில் மக்களால்…