‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின் சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு! தலைமையமைச்சர் நரேந்திரர் மூன்று நாள் முன்பு சென்னையில் சில திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தார். இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.தாலின் மிகச் சிறப்பாக நம் மாநிலத்தின் வேண்டுகோள்களைத் தெரிவித்தும் திராவிட நன்முறை ஆட்சி விளக்கம் குறித்தும் பேசினார். இதனால் கண்ணேறு பட்டதால் கண்ணேறு கழிக்கப் பூசுணைக்காய் கட்டுவதுபோல் ஒருவர் சிலவற்றை உதிர்த்துள்ளார். ‘முதல்வர் பேசிய உரைக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். அந்த அளவிற்குச்…