தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 5 : இலக்குவனார் திருவள்ளுவன்
(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] ஆகாசவாணி – வெற்றியாய்க் காட்டப்படும் தோல்வி:- வானொலியில் ‘ஆகாசவானி’ என்று கூறுவதற்குப் பெரும் எதிர்ப்பு கிளப்பினோம். நீறுபூத்த நெருப்பு, என நம்மை நாமே கூறிக்கொண்டாலும் உண்மையில் நாம் பெட்டைப் பனைமரங்கள்தாம். இந்த ஒலிக்கெல்லாம் நடுவனரசு அஞ்சாது….