‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்துகள்!-இலக்குவனார் திருவள்ளுவன்
‘அகரமுதல’ இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் பகிர்வாளர்களுக்கும் கருத்தாளர்களுக்கும் பரப்பாளர்களுக்கும் அல்லன தொலையவும் நல்லன பெருகவும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கிடவும் அன்பு வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர் ‘அகரமுதல’ < www.akaramuthala >
சமுதாயம் அன்றும் இன்றும் – தி. வே. விசயலட்சுமி
சமுதாயம் அன்றும் இன்றும் மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும். ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே -என்று பாடினார் புலவர் பொன்முடியார். அரசனுக்காகப் போர்புரிந்து வெற்றி பெற்றுத் தருதலே அக்கடமையாக இருந்தது. இன்றோ, போர் முயற்சியில் ஈடுபடாமல் உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே இளைஞர்க்குக் கடமையாக…
அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.
அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும். அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல
“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” – அறிமுகம்
“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 34 நாளிதழ்கள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதிதான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து…
ஆதிபகவன் யார்?- புலவர் செம்பியன் நிலவழகன்
வெண்பா வாலறிவன் ஆசான் மலர்ந்த மனத்திருப்பான் நூலறிஞன் நுண்மாண் நுழைபுலத்தான் – கோலக் கலையாவும் கற்பித்தான் கற்றோர்தம் நெஞ்சில் நிலைத்தானை என்றும் நினை. (நன்மொழி நானூறு 4) தனக்குவமை இல்லான் தருங்கல்வி ஆசான் மனக்கவலை மாற்றிய மாண்பின் மனத்தான் அறவாழி அந்தணன் ஆன்றோன் அவனை மறவா மனேம மனம். (நன்மொழி நானூறு 5) “அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு” திருவள்ளுவனார் இம்முதன்மைத் திருக்குறளில் இரண்டு கருத்துகளைச் சொல்கின்றார். ஒன்று,…
தமிழ்ப்பாட்டு பாடு – இல்லையேல் ஓடு!
இதழுரை இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும் தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர். அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்? தமிழ்நாட்டிலும் பிற மொழி பேசுவோர் தம்…