பாரதி பெருவிழா – ஆசுதிரேலியா
தமிழருவி மணியனின் சொற்பொழிவு பாரதி பாசறையின் சிறப்புப் பட்டிமன்றம் கார்த்திகை 20, 2045 / திசம்பர் 6, 2014
(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!
முதன் முதலாக உலகத் திருக்குறள் மாநாடு! இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்! உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு! கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்! இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…
சிட்டினி நகரில் திருக்குறள் மாநாடு
ஆசுதிரேலியாவில் பேரா.மறைமலை இலக்குவனார் ஆத்திரேலியா சிட்டினி நகரில் சித்திரை 13, தி.பி.2045 / ஏப்பிரல் 26, கி.பி. 2014 சனிக்கிழமை திருக்குறள் மாநாடு நடைபெற்றது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார், ஈழப் பேராசிரியர் சிவகுமாரன் மயிலாடுதுறைப் பேராசிரியர் சிவச்சந்திரன் முதலான பலரும் கலந்து கொண்டனர். ”திருக்குறள் ஒரு பல்துறைக்கலைக்களஞ்சியம்”என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவாற்றினார். குறள் பரப்பாளர் எழுத்தாளர் மாத்தளை சோமு அங்குள்ள தமிழன்பர்களுடன் இணைந்து இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.