தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்! – உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்! தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு போட்டுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் 4.4.2016 அன்று நீக்கி உத்தரவிட்டது. திருச்சி அக்கியம்பட்டி எனும் ஊரிலுள்ள கோயிலில், நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் கோரிச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விண்ணப்பம் தரப்பட்டது. அந்த விண்ணப்பத்தை 2015 நவம்பரில் உசாவிய தனி நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் 2016 சனவரி 1-ஆம் நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான…