2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 இன் தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! தமிழ்வளர்ச்சித் துறை என்னும் பெயர் குறித்துப் பல்வேறு தமிழ் அமைப்பினரும் பிற துறையினரும் இத்துறை தமிழையா வளர்க்கிறது. அப்படியானால் தமிழ் வளரவில்லையா என்பர். சிலர் தமிழ் மேம்பாட்டுத் துறை எனப் பெயரிடலாமே என்பர். அப்படிக் கூறினால் தமிழ், மேம்படுத்தப்படவேண்டிய குறை நிலையில் உள்ளதாகப் பொருள் ஆகாதா என விடையிறுப்பேன். அலுவலகங்களில் தமிழை வளர்ப்பதால் தமிழ் வளர்ச்சித் துறை எனக்…