(தந்தை பெரியார் சிந்தனைகள் 16 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 17 1. ஆட்சிமுறை. இதுபற்றித் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைக் காண்போம். (1) ஆட்சிமுறை என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகக் கருதப்பெற வேண்டியது. (2) “ஓர் இணைச்செருப்பு 14 ஆண்டுக்காலம் இந்த நாட்டை ஆண்டதாக உள்ள கதையை மிகுந்த விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் இழிவான மிருகம், நாய், கழுதை, ஆண்டால்கூட அஃது அதிகமான அவமானம் என்றோ குறை…