தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] ஆகாசவாணி – வெற்றியாய்க் காட்டப்படும் தோல்வி:-             வானொலியில் ‘ஆகாசவானி’ என்று கூறுவதற்குப் பெரும் எதிர்ப்பு கிளப்பினோம். நீறுபூத்த நெருப்பு, என நம்மை நாமே கூறிக்கொண்டாலும் உண்மையில் நாம் பெட்டைப் பனைமரங்கள்தாம். இந்த ஒலிக்கெல்லாம் நடுவனரசு அஞ்சாது….

ஆட்சிமொழிக்கருத்தரங்கம் , புதுச்சேரி

  புதுவைத் தமிழ்ச் சங்கம் ஆவணி 14, 2045 / ஆக.30, 2014 இல் ஆட்சிமொழிக்கருத்தரங்கம் ஒன்றைநடத்தியது. அதன்தலைவர் வெ.முத்து தலைமை தாங்கினார். செயலர்மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். தனித்தமிழ் இயக்கத் தலைவர்முனைவர் க.தமிழமல்லன் புதுச்சேரியின் ஆட்சிமொழியே என்பதைச் சட்டப்பொத்தகம்அரசாணைகள் சட்டமன்றத்தில் 1965 முன்வடிவு வைக்கப்பட்டபோது ச.ம.உக்கள் அதன்மேல் நிகழ்த்திய உரைகள் முதலியவற்றைச் சான்றுகளாக்கி நிறுவிக்காட்டினார். தமிழுக்கு இதுவரை நன்மை செய்த முன்னாள் முதல்வர்கள் பாரூக், இராமசாமி ஆகியோரைப் பாராட்டியும் பேசினார். இதில் ந.மு.தமிழ்மணி, கல்லாடன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். கடைசியில் விசாலாட்சி நன்றி கூறினார்.