தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை  தமிழில் படிப்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக 30.09.2010 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையைக் கண்டு தவறாக நம்பியதுபோல் இப்போது அத் தொடர்பில வெளிவரும் திருத்த ஆணை குறித்தும் நாம் நம்பி ஏமாறுகிறோம். இன ஒதுக்கீட்டைச் சுழற்சி முறையில் பின்பற்ற அரசு ஆணை உள்ளது. தமிழ்வழியில் படித்தோருக்கான முன்னுரிமையை இச்சுழற்சி முறையில் திணித்துள்ளனர். எனவே, உரிய முன்னுரிமை என்பது இல்லாமல் போகிறது. 20 விழுக்காட்டு முன்னுரிமையை முதலில் வழங்கிவிட்டு, எஞ்சிய பணியிடங்களுக்கு ஒதுக்கீட்டுச் சுழற்சி…