திமுகவின் கைகளில் கடிவாளம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
திமுகவின் கைகளில் கடிவாளம்! நம்நாட்டு மக்களாட்சி முறைக்கேற்ப ஆட்சியை அமைப்பதற்கான வெற்றி வாய்ப்பை திமுக இழந்து உள்ளது. 9 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வேறுபாட்டிலும் மேற்கொண்டு 9 தொகுதிகளில் ஆயிரத்திலிருந்து 2615 இற்குக் குறைவாகவும் மேற்கொண்டு 14 தொகுதிகளில் இதிலிருந்து 5000த்திற்குக் குறைவாகவும் வாக்குகள் பெற்று வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களுள் மிகுதியானவர் தி.மு.க.வினர். இதனால் திமுக அணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. எனினும் மிகுதியான (98) ச.ம.உ.உடைய எதிர்க்கட்சியாக மாறி உள்ளது. இனப்படுகொலை நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் செயல்பாட்டால் …