வெருளி அறிவியல் 34 – 37 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் – 31-33 தொடர்ச்சி) வெருளி அறிவியல் 34 – 37 34. ஆண்வெருளி– Androphobia/Arrhenphobia/Hominophobia ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி. ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில்…