வேண்டா வரன் கொடை! –  சி. செயபாரதன்

வேண்டா வரன் கொடை!       பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித் தாயோ கருவழிப்பாள்  தான்விரும்பி !  – காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ? கண்ணிரண்டும்  போன கதை !   ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ  இட்டது கண்ணகிக்கு ! – வாழாது மீண்டும் நகைச்சண்டை !  மேனியில்தீ  தங்கைக்கு ! வேண்டாம் வரதட் சணை !   தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் ! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப ஆண்மகனும்…

தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…

கியூபெக்கு மாகாணத் தாய்மொழிப்பற்று வெல்க!

 பிரெஞ்சு மொழிப் பயன்பாட்டை  மிகுவிக்க ஆங்கில அறிவிப்புப் பலகைகளை நீக்கச் சொன்ன கனடா அரசு ஒட்டாவா : கனடா நாட்டின், கியூபெக்கு மாகாண மருத்துவமனைகளில் உள்ள ஆங்கில அறிவிப்பு பலகைகளை நீக்குமாறு  அண்மையில் இந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கியூபெக்கு மாகாணத்தின்  ஆட்சி மொழி பிரெஞ்சு.  ஆங்கிலமும் அதிகார முறை மொழியாக உள்ளது.  எனினும்   பிரெஞ்சை பரப்பும் விதமாக இப்பகுதியிலுள்ள காசுபே நகரில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. ஐம்பது  விழுக்காட்டிற்கும் மிகுதியாக ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பிரெஞ்சு மொழிப்…