புருவங்களை முறுக்கு! – மும்பையில் ஆதிரை முழக்கம்

தமிழ்வாழ்த்து எல்லையை இழந்தாய் வாழ்ந்த இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று முல்லையும் இழந்தாய் எங்கள் முத்தமிழ்த் தாயே என்றும் தொல்லையில் கிடந்தும் வீரத் தோள்தனைத் தூக்கி நின்றாய் இல்லையே சங்கக் காலம் ஏங்கினேன் தமிழே வணக்கம். அவை வணக்கம் கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை பொன்னகராம் புதுநகராம் வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம் மின்னரகராம் தொழில்கள் கலைகள்…

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆதிரை பானுமதி

    பேரா. முனைவர். ப. பானுமதி மலேசியாவில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அரங்கத்தலைமை வகித்ததோடு “பெரிய புராணத்தில் பேசப்படாத பெண் புராணங்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார். அரங்கத்தில் மேனாள் இந்திய ஆட்சிப் பணியாளர் கற்பூர சுந்தர பாண்டியன், முனைவர். வாணி அறிவாளன், முனைவர். திலகவதி   ஆகியோர் ஆய்வுக்கட்டுரை வாசித்தனர். அரங்கத்தில் நீதியரசர் வள்ளிநாயகம், கவிவேந்தர் க. வேழவேந்தர், பேரா. இரா.மோகன், பேரா. நிர்மலா மோகன், இரா.மதிவாணன், கலைமாமணி சோபனா இரமேசு, சிங்கப்பூர் பதிப்பாளரும் பொறியாளருமான…

எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை

  முனகல்களோடு புலர்ந்து கொண்டிருந்த பொழுதை மூர்ச்சையாக்கி புதைத்த அந்த நாள் பால் குடிப்பதற்காக, சடலத்தின் உடலை உறிஞ்சிய பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள் கனவுகளைச் சுமந்த பாவாடை மலர்களின் நீலம் பாய்ந்த நயனங்கள் வெட்டிய நெஞ்சின் முட்டிய உறுதியின் அடையாளமாய் கருகிய மீசைகள் சுருங்கிய தோலும் சுருங்காத கனவும் தேக்கிய  இதயங்கள் எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! மரணம் அடுக்கி மாளிகை கரசேவக இனவெறிப் பேய்கள் குருட்டு மொழியின் கதறல்களுக்கு இன்னும் வெளிச்சமிடாத பச்சைத் துரோகங்கள் மே 18 சிந்திய செந்துளிகள் அமைதியடையும்…