ஆனந்தமாகிறாள் – ஆ.செந்திவேலு
ஆனந்தமாகிறாள் பல் வரிசை தப்பினது அவளுக்கு மிக அழகாகவே அமைந்து போயிருந்தது. இவளை மாதிரித் ‘தெத்துப்பல்’தான் அந்தப் புகழ்மிகு திரைப்பட நடிகைக்கும் கூட தனிப்பட்ட தன்மையாய் அமைந்துள்ளது என எண்ணிக் கொண்டவன் அதை நேரிடையாய் அவளிடமே சொன்னதும் பெரிய கலவரமாகித்தான் போனது. இருந்தும் அப்போது அதை மகிழ்ச்சியாகவே எதிர் கொண்டவன் இப்போது எல்லாம் நிரம்பவும் மாறித்தான் போயிருந்தான். நந்தினி ! ஆனந்தனின் வம்புக்கு ஆளானவள், ஆசைப்பட்டவள். இப்போது அவள் எதிராய் நடந்து வந்தாள் என்றால் பார்வையைத் திருப்பிக் கொள்வது அவன் வழக்கமாகவே ஆகியிருந்தது….