உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 90 : அத்தியாயம்-55 : சிறு பிரயாணங்கள்-தொடரச்சி) என் சரித்திரம்நான் இயற்றிய பாடல்கள் தஞ்சை மார்சல் கல்லூரி தமிழ்ப்பண்டிதரும் என் ஆசிரியருடைய மாணாக்கருமாகிய ஐயாசாமிப்பிள்ளையென்பவரும் இலக்கணம் இராமசாமி பிள்ளையென்பவரும் வேறு சிலரும் விரும்பியபடி ஆசிரியர் தஞ்சை சென்று அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தார். அக்காலத்தில் நான் அவருடைய உத்தரவின்படியே உத்தமதானபுரம் சென்று என் தாய் தந்தையரோடு இருந்து வரலானேன். என் சிறிய தகப்பனாருடைய வருவாய் போதாமையால் குடும்பம் மிக்க சிரமத்தோடு நடைபெற்று வந்தது.அக்குடும்ப நிலை திருந்தவேண்டுமாயின் என் தந்தையார் மீட்டும்…