அகநானூற்றில் ஊர்கள் – 2/7: – தி. இராதா
அகநானூற்றில் ஊர்கள் – 2/7 அழுங்கல் பல விழுதுகளைக் கொண்ட ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் பறவைகளின் ஒலியைக் கொண்ட ஊர் அழுங்கல் ஆகும். “பல்வீழ் ஆலப்போல ஓலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (அகநானூறு 70) “என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே” (அகநானூறு 180) என்னும் வரிகள் உணர்த்துகின்றன. “அன்றை அன்ன நட்பினன் புதுவோர்த்து அம்ம அவ் அழுங்கல் ஊரே” என்று குறுந்தொகையும் அழுங்கல் ஊரின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. கரிய கூந்தலையும் திருத்த முறச்…