ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!
ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்! உண்ணச் சிறிது போதும்! உறங்கப் படுக்கைத் தேடேன்! எண்ணப் பொழுது வேண்டும்! எழுத உரிமை வேண்டும்! என்பதை முழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஆய்வறிஞர், தமிழ்க்கடல், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இன்று(ஆடி 09, 2052 / 25.07.2021) இரவு 7.45 மணிக்குத் திருநகரில் அவரது இல்லத்தில் மறைந்தார். பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு நிலைகளில் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் பயணத்தைக்…