முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர்   பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார்; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கட்டலைத் தம்மதிவலிகொண்டு கடைந்து முதன் முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார். – மு.இராகவையங்கார்: ஆராய்ச்சித் தொகுதி: பக்கம்: 398-399