நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! ஆராரோ ஆரிரரோ ஆராரோ யார் இவரோ? ஆராரோ நிலம் பறிக்க ஆராரோ அழுகின்றோம். கண்ணே நீ விழித்து விடு கண்ணீரை விட்டு விடு காலம் எங்கள் வசமாகும். அழுவதை நிறுத்தி விடு சொந்த மண்ணில் படை வரலாம் வெந்த புண்ணில் சீழ் வரலாம் ஆர் ஆற்றி தீருமம்மா ஆறாத எம் துயரம்? எமக்காக குரல் கொடுக்க எவர் குரலும் இரங்கவில்லை எதிர்காலம் இருண்டிடினும் எதிர் கொண்டு வெல்வோமடி! கண்ணே நீ எழுந்திடம்மா கண் விழித்துப் போராடு கண்ணுறங்க நேரமில்லை…