அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தில் உள்ள பென்டன்வில்,இராசர்சு, பெயெட்வில், உலோவெல் பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு ஆர்கன்சாசு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் விழா ‘மண்வாசனை‘ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மண்வாசனை 750 விருந்தினருடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சனவரி 18 அன்று  காலை 10.30 மணிக்கு, வேட்டி சட்டை அணிந்த தன்னார்வலர்கள் விருந்தினரை வரவேற்று, மணக்க மணக்க மதிய உணவு படைத்தனர். இலையில் 16 வகை உணவு, விருந்தினருக்கு அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே பரிமாறப்பட்டது.  மன நிறைவாக உணவு உண்ட…