ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.
(சித்திரை 14, 2045 / 27 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம்…
ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.,
மழை பெய்கிறது கதிரவன் காய்கிறது. இவற்றால் மண்ணால் புற்பூண்டுகள் பயிர் பச்சைகள் முளைத்துத் தழைக்கின்றன. இன்னோரன்ன பல்வேறு நிகழ்ச்சிகள் இயல்பாய் நடைபெறுகின்றன. மழை எங்கிருந்து உருவாகின்றது? காயும் கதிரவன் எவ்வாறு இயங்குகின்றது? மண்ணினிருந்தும் புற்பூண்டுகள் எப்படித் தோன்றி வளர்கின்றன? இத்தகைய வினாக்கள் நம் மனத்துள் எழுதுவதில்லை. நாம் இவற்றையெல்லாம் இயற்கையெனக் கூறி மேனோக்கோடு விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு விஞ்ஞானியோ இவை போன்ற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குகின்றான். நோக்கியவற்றை ஆழ்ந்த அறிவு கொண்டு ஆய்கின்றான். இங்ஙனம் பெற்ற ஆராய்ச்சி அறிவைப் புதுமைகள்…