அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்
அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. இந்திய நாட்டின் மூத்த தலைவரும் தி.மு.க.வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நோய்வாய்ப்பட்டு மரண வாயிலை நெருங்கும் பொழுதே குடும்பத்தினர் அடக்கம் செய்யும் இடம்பற்றி முடிவெடுத்துள்ளனர். எனவேதான் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரர்(மோடி) அவரைப் பார்க்க வரும்பொழுதே சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணா நல்லடக்க இடத்தருகே இடம் ஒதுக்க ஏற்பாடு செய்து தருமாறு வேண்டியுள்ளனர். பின்னர் தமிழக முதல்வரை மூத்த தி.மு.க.தலைவர்களும் குடும்பத்தினரும் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து இடம் ஒதுக்க வேண்டியுள்ளனர். …