தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில் ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர் ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுடன் 482/500 என்ற அளவு மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி வந்தது.   இந்நிலையில் அருகில் புதிதாகத் தோன்றிய ஆங்கில வழிப் பள்ளி நிருவாகத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நயவஞ்சகமாக…