நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்

நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில்  காலன் வீசும் பாசக்கயிற்றைக் கத்தரிக்கோல் கொண்டு கத்தரிக்க முயலும் மருத்துவத்துறைக்கு மனமார நன்றி!.   கூலிக்கு மாரடிக்கவில்லை புரிகிறது…………கூலி வாங்கிட இருப்போமா தெரியவில்லை!?.   மயானம் நிரப்பும் போராட்டம் தியானம் புரியும் கிருமிகள் சயனம் மறந்த மருத்துவம் சகலமும் கல்வி மகத்துவம்   நலவாழ்வுத்துறை மட்டுமே சுழலச், சுருண்டு போயின பல துறைகள்   எல்லாம் தனித்திருக்க தன்னை யிழந்த மனிதனோ படித்துறையில்   கடவுள் கல் எனப் புரிகிறது! மனிதம் புனிதம் ஆகிறது   நோயைத் தீர்க்க…

பசியும் கிருமியே! – ஆற்காடு க. குமரன்

பசியும் கிருமியே!   மகுடை கொடிய கிருமிதான் தொற்றுமுன்னே தொல்லைகள் ஆயிரம்   தனிமைப் படுத்தப் படுவதே பெரிய தண்டனை முடங்கிக் கிடக்க சொல்வது முழு தண்டனை அடைந்து கிடக்க சொல்வது ஆயுள் தண்டனை   நடுவண் அரசு நகராதே என்றது மாநில அரசு வழி மறித்தது வணிக உலகம் வாடியது தொழில்துறை தூங்கியது   பசி மட்டும் தீராமல் பஞ்சப்பாட்டு பாடியது. அடுத்த வேளை உணவின்றி வெறும் கையைத் தட்டி ஓலமிட வேண்டா என்று ஓசை எழுப்பச் சொன்னது   மணியாட்டி க்…

மகுடைக்குக் காலன்! – ஆற்காடு க. குமரன்

மகுடைக்குக் காலன்!   தனித்திருக்கிறேன் விழித்திருக்கிறேன் பொறுத்திருக்கிறேன் வெறுத்திருக்கிறேன்!   காலனாக வரும் மகுடைக்குக் காலனாகக் காத்திருக்கிறேன்!   என்னைத்தொற்றும் நோய்மி என்னோடு அழியட்டும்! என் உயிரைக் குடிக்கும் அதன் உயிரைக் குடிக்கிறேன் நான்!    என் தலைமுறைக்காக என் தலை வீழத் தயங்கேன்!   என்னுயிரோடு இந்நோய்மி  இறக்குமாயின் மண்ணுயிர்க்கிரையாய் மாண்டிடத் துணிகிறேன்!   மகுடையைக் கொல்லத் தனித்திருப்போம் விழித்திருப்போம் காத்திருப்போம்!   இவண் ஆற்காடு க. குமரன் 9789814114

குடும்பத்தை இணைக்கும் மகுடை! – ஆற்காடு க. குமரன்

குடும்பத்தை இணைக்கும் மகுடை! என் குடும்பத்தோடு என்னைக் கூட்டிக் கொடுத்தது அன்பைக் காட்டிக்கொடுத்தது   இணையம் கூட இன்று வந்தது இணையும் குடும்பம் என்றும் நிலைப்பது!   பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம் பிணமாகப் போகிறோம் என்ற பயத்தில் பதுங்கிக் கிடக்கிறோம்!   வருமுன் காப்போம் வந்த பின்னும் காப்போம் பகிராமல்   கண்ணுக்குத் தெரியாத நோய்மி,  கடவுளையும் கடந்து கதவடைக்காமல் காற்றில் கட்டுப்பாடில்லாமல்   விடியலில் எழுந்து விரைந்து கடந்து உழைத்துக் களைத்து உறவுகள் உறங்கிய பின்னே உடைந்து திரும்பி அடைந்து உறங்கி…

மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்

மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் கோடை விடுமுறைக் கொண்டாட்டங்கள் மகுடை(கொரோனா) விடுமுறைத் திண்டாட்டங்கள் அலுவலகம் செல்லாமல் அறையில் முடங்கிக் கிடக்கும் அப்பா அடுப்பங்கரையில் விடுமுறை இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் அம்மா ஓயாமல் உளறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேர்வு தொலையட்டும் என வேண்டாத தெய்வமில்லை வேடிக்கை பார்க்கும் புத்தகங்கள் வெளியில் செல்லலாம் என்றால் விரட்டுகிறது அரசாங்கம் முடங்கிக் கிடக்க சொல்லி முழங்குது தொலைக்காட்சி சிறகின்றிப் பறக்கும் கிருமி சிறையில் மக்கள் விடுமுறையிலும் ஒவ்வொரு வீடும் உயிர் விலங்குப் பூங்கா காப்பாற்றச்சொல்லிக் கதறினோம் கை கழுவி நகர்ந்தது அடுத்த அவசரச்…

விழியிடையில் வழிநடை தவறினேன்! – ஆற்காடு க.குமரன்

குழைந்து கிடக்கும் இடையில் மறைந்து கிடக்கும் மடிப்பில் புதைந்து கிடக்கிறேன் நான்   மூச்சு முட்டுதடி பேச்சு கெட்டதடி உச்சு கொட்டுதடி உள்வாங்கியவுன்னழகு   காற்று வீசூதடி  கண்ணில் தெரியுதடி சேலை விலகியே தேவை கூறுதடி   கைப்பிடி நழுவி கவிழ்த்தேன் கைப்பிடியிடையாலே கைப்பாவையானேன் நான்   குடம் சுமந்ததை குழவி சுமந்ததை என் மனம் சுமந்ததை அறியாயோ   இரவு உடையில் குருடாகும் விழிகள் மூடி மறைத்ததால் முறைக்குதடி  காற்று   சேலை செய்யும் சேவை காற்றால் திரைச்சீலை கண்கள் தீரும் தேவை…

மணிமுடி நோய்மியே! அழித்திடு தீயரை! – ஆற்காடு க.குமரன்

மணிமுடி நோய்மியே! அழித்திடு தீயரை!   ‘கொரோனா‘ வருதோ இல்லையோ கொஞ்சம் ஓய்வெடுக்கிறது கொள்ளி வாய்கள் அறிக்கை சொல்லாமல் அடக்கி ஆள்கிறது வாய்க்கவசம்   தூணிலும் துரும்பிலும் தூங்கும் கடவுள் தூங்கிக்கொண்டே தூதுவர்கள் தொல்லையின்றி   கொள்ளையர்களைக் கொண்டு போகட்டும் கொள்ளை நோய்   ஏழை உழைப்பாளியை ஏதூம் தீண்டுவதில்லை தீது நினையாதவனை யாதூம் நுகர்வதில்லை   ‘கொரோனாவே’ வருக. கொடியவர்கள் மடிய   துரோகிகளைத் தூக்கிலிடாது தூங்கும் மன்றம் தூசியாய் வந்து நீ தூக்கிலிடு   இல்லாத கடவுள் பெயரில் நில்லாத வன்முறை…

தமிழனே சொந்தக்காரன்! – ஆற்காடு க.குமரன்

தமிழனே சொந்தக்காரன்! வந்தாரை இருகரம் நீட்டி வரவேற்ற தமிழன்! வந்தார்கள் வென்றார்கள் கொன்றார்கள் வாய்க்கரிசி, வரவேற்க நீட்டிய கைகளில்! வாழ வந்தவனை வாழ வைத்து விட்டு வாழ வந்தவனிடம் வாழ வழி கேட்கும் வக்கற்ற தமிழனே! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எடுத்துச் செல்பவன் பாடுகிறான் இருப்பவன் சுவைக்கிறான்! பிழைக்க வந்தவனால் பிழைப்பை இழந்து பிழைக்க வந்தவனிடம் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் கூட்டம் சுவைத்துச் சுவைத்து நசிந்து போனவன் தமிழன் கைதட்டி தன் கைவரிகளைத் தொலைத்தவன் தமிழன் பொழுது போக்குகளில் வாழ்நாள் பொழுதைப்…

எழுதிக்கு ஏனோ மரணத்தண்டனை? – ஆற்காடு.க.குமரன்

எழுதிக்கு ஏனோ மரணத்தண்டனை? தீர்ப்பு எழுதியதும் தீர்ந்துபோகும் எழுதுகோல்  கூர்முனை செய்த குற்றம் என்ன? குற்றவாளிக்குக் கூட ஆயுள் தண்டனை இதற்கேனோ மரணத் தண்டனை?   வாய்மையே வெல்லும் முழக்கத்தோடு காந்தி. கண்ணைக் கட்டிய நீதி தேவதை காற்றில் பறந்த நீதி!.   இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114

தனிப்பெருமை பெண்மையே! – ஆற்காடு.க.குமரன்

தனிப்பெருமை பெண்மையே! தன்முகம் மறந்து பன்முகம்   உள்ளும் வெளியும் உலகையாளும்   இல்லையேல் இல்லை வயிற்றுக்குள் வைத்துவுயிர்ப்பிக்கத் தன்னுயிரை தனிவுயிராய்த் தரணிக்களித்த தாரகை!   முத்துக்குள் சிப்பி வைரத்துக்குள் மண் பிறக்கும் முன்னே உறவாடும் உலகில் ஒரே உயிர்!   அகத்தில் வைத்து முகம் பார்க்கும் அழகி!   உறவுகளை உயிர்ப்பித்து உலகை உருவாக்கும் உயிர்!   ஒருமையைப் பன்மையாக்கும் தனித்தன்மை தனிப்பெருமை பெண்மையே!   இவண் ஆற்காடு.க.குமரன் – 9789814114  

எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! – ஆற்காடு.க.குமரன்

எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! ஆட்சியாளர்கள் தவறாமல் ஐந்தாண்டு படிப்பிக்கும் ஆட்சிப் பாடத்தையே புரிந்து கொள்ளாமல் தேர்தல் தேர்வில் தோல்வியடையும் வாக்காளர்கள்! வெற்றி தோல்வியை வரையறுக்கும் வேடிக்கைத் தேர்வு முறை!  தேர்வெழுதுங்கள்! தோல்விப் பயமின்றி  முதுமையடைந்தும் முடிவெடுக்கத் திணறும் மூடர் கூட்டமதில் முளைவிடும் தளிர்களே முடிந்த வரை முயலுங்கள்! வினாத்தாள் வினாக்களோடு விடைத்தாள் வெறுமையாய் உங்களுக்காக… மனத்தில் உள்ளதை எழுதாதீர்கள் பட்டறிவைப் பதிக்கத் தோன்றும் தேர்வு ஒரு பட்டறிவே பட்டறிவிற்கே   பட்டறிவா? மதியில் பதிந்ததை எழுதுங்கள் புதிய பாதை புலப்படும்! எல்லா வினாக்களுக்கும் விடையளியுங்கள் சரியா…

வான் நிலவே என்னவளும்!-ஆற்காடு.க.குமரன்

குளத்து நீரில் குளிப்பதால் வெண்ணிலவு….. பசலையில் மெலிவதால் பிறை நிலவு……. கூடலில் முழுதாகி வெள்ளுவா…… வானக் கூடாரத்தில் மறைந்து நட்சத்திரப் பிள்ளைகளைப் பெறுகையில் காருவா………. நிலவே என்னவள் நிலவே. இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114