எம்ஞ்சிஆர் நூற்றாண்டு விழா  கவியரங்கம் இடம் —  எம்ஞ்சிஆர். பல்கலைக்கழகம்  மதுரவாயில்  சென்னை நாள் :  பங்குனி 30, 2048 / 12 – 04 -2017 தலைமை –  கவிமுரசு  ஆலந்தூர் கோ. மோகனரங்கம் தலைப்பு – மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர் பாடும் கவிஞர் – பாவலர் கருமலைத்தமிழாழன் தமிழ்த்தாய்  வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்           களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்           இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட…