ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் நக்கீரன் இதழாசிரியர் நக்கீரன் கோபால், நேற்று(9.10.2018) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து, பேரா.நிருமலாதேவி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து நக்கீரன் இதழில் வருவதாகவும் இவை ஆளுநரை மிரட்டுதல், ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகியன தொடர்பான குற்றப்பிரிவு 124.அ இன்கீழ் வருவதாகவும் காவல் துறையினர் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் இதை உசாவிய எழும்பூர் 3…
ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்! இந்திய நாடு முழுவதுமே மத்திய ஆளுங்கட்சிக்கு ஒத்துவராத மாநில ஆட்சிகள் பலமுறை கவிழ்க்கப்பட்டுக் கலைக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் (சூலை 31, 1959), சவகர்லால்நேருவால், தேர்ந்தெடுக்கப்பட்டப் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி கேராளவில் கலைக்கப்பட்டுக் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் இதுவரை 125இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாநிலஅரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. சத்திசுகாரையும்(Chhattisgarh) புதியதாகத் தோன்றிய தெலுங்கானாவையும் தவிர எல்லா மாநிலங்களுமே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உட்பட்டுள்ளன. ஏறத்தாழ 85 முறை பேராயக்(காங்.)கட்சிதான் இத்திருவிளையாடலைச் செய்துள்ளது. பா.ச.க.வின் கலைப்புப்பணி…