ஆளுநராயினும் நா காக்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநராயினும் நா காக்க! வரலாற்றை அறியாமலும் அறிந்தும் வரலாற்றை மறைத்தும் யாராக இருந்தாலும் உளறக்கூடாது என்பதை உணர்ந்து உண்மையைக் கூற வேண்டிய உயர்ந்த பொறுப்பில் உள்ள ஆளுநர், தமிழ்நாடு என்னும் பெயரை அகற்றும் வகையில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 355) என்பதை உணர்ந்து பேச வேண்டியவர், தமிழ்நாடு என்னும் பெயரின் உண்மை வரலாறு அறியாமல் இப்பெயரை மாற்ற வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார். “தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்….