திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 062. ஆள்வினை உடைமை
(அதிகாரம் 061. மடி இன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 062. ஆள்வினை உடைமை ஏற்றுக் கொண்ட செயல்முடிக்க, இடைவிடாது செய்யும், நல்முயற்சி “அருமை உடைத்(து)”என்(று), அசாவாமை வேண்டும்; பெருமை, முயற்சி தரும். “முடியாதது” என்று, மலைக்காதே; முயற்சி, பெருமையாய் முடியும். வினைக்கண், வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை தீர்ந்தாரின், தீர்ந்தன்(று) உலகு அரைகுறையாய்ச் செயல்கள் செய்யாதே; செய்தால், உலகமும் கைவிடும். தாள்ஆண்மை என்னும், தகைமைக்கண் தங்கிற்றே, வேள்ஆண்மை என்னும், செருக்கு….