தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா!
நாள்: தை 28, 2050, திங்கள் கிழமை, 11.02.2019 நேரம்: அந்திமாலை 6. 00 மணி – 8. 30 மணி; இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம். தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறு கொண்டது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை(ரெட்டி)யாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி…
கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் : இணையத்தளத்தில் காணலாம்
கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் இணையத்தளத்தில் காணலாம் காவிரிப்படுகையின் கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய்-எரிவளிக் கழகத்துக்காக தமிழ்நாடு காவல்துறை பல்லாயிரக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது நாமறிந்த செய்தி! அங்கு நடந்தது என்ன என்பதையும், காவிரிப்படுகையில் எ.எ.(ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் செய்திகளுடன் தொகுத்து, “கதிராமங்கலம் கதறல்” என்ற புதிய ஆவணப்படத்தை பன்மைவெளி வெளியீட்டகம் உருவாக்கியது. ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முதல் ஆவணப்படமான “மொழிப்போர்…
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு செயகாந்தன் – ஆவணப்படமும் உரையாடலும் கார்த்திகை 04, 2047 / நவம்பர் 19, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம் , பெ.சு.உயர்நிலைப்பள்ளி, இராமகிருட்டிணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004 ஆவணப்படமும் அதன் இயக்குநர் திரு இரவி சுப்பிரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன. கவிதை, கதை வாசிப்பு – வழக்கம்போல் அனைவரும் வருக!
‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!
‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்! மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் பொதுத்துறைப் பரிமாற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இந்தக் கடன் 96 ஆயிரம் கோடி உரூபாய்! இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாளர்களும், அலுவலர்களும் நடத்திய ‘மின்சார ஊழல்’ எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது! ஆய்வு, எழுத்து,வருணனை: சா.காந்தி வடிவம், இயக்கம்: சா.காந்தி, ஆர்.ஆர்.சீனிவாசன் ஒளிப்பதிவு: எம்.ஆர்.சரவணக்குமார் படத்தொகுப்பு: கா.கார்த்திக் படைப்பு: தமிழ்நாடு…
சென்னையில் ‘குடியம்’ ஆவணப்படம் திரையிடல்
புரட்டாசி 02, 2046 /19-09-2015 மாலை 05.00 தாகூர் திரைப்பட மையம் இராசா அண்ணாமலைபுரம் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20 புதுக்கல் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அந்தப் குதிகளிலுள்ள குகைகள், பாறையமைவுகள் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்தக் ‘குடியம்’. இதன் மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140 பேரடி(மீட்டர்) உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் அறிஞர்கள் கருத்துரைகள் இடம் பெறுகின்றன. …
“இது இனப்படுகொலையா? இல்லையா?” – சென்னையில் ஆவணப்படம் வெளியீடு!
இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியுள்ள “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு, சித்திரை 30, 2046 / 13.05.2015 மாலை, சென்னை வடபழனி ஆர்.கே.வி. திரையரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையேற்றார். ஆவணப்படத்தின் இயக்குநர் வ. கவுதமன் முன்னிலை வகிக்க, படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைத் தலைவர்கள் வெளியிட, மாணவத் தோழர்கள் செம்பியன், சோ.பிரிட்டோ முதலானோர் ஆவணப்படத்தைப் பெற்றுக் கொண்டனர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்தியப்பொதுவடைமைக்…
இனப்படுகொலை – ஆவணப்படம் வெளியீடு
அன்பார்ந்த தோழர்களே , உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் “இது,திட்டமிட்ட இனப்படுகொலை!” என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனச்சான்றை உலுக்கும் வகையில் இயக்குநர்.வ.கவுதமன் அவர்களின் “இது, இனப்படுகொலையா இல்லையா?” எனும் நெருப்புப் படைப்பு சித்திரை 30, 2046, மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (ஆர்.கே.வி.படநிலையம், வடபழனி, சென்னை) வெளியாக உள்ளது….
இதழியலாளர் பாரதி – ஆவணப்படம் திரையிடல்
இதழியலாளர் பாரதி ஆவணப்படம் திரையிடல் 27 நிமிடம் ( இயக்கம் – அம்சன் குமார் )பங்கேற்பாளர்கள் .. இதழாளர் மாலன் இதழாளர் திருப்பூர் கிருட்டிணன் …
சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல்
புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி கார்த்திகை 10, 2045 / 26.11.2014 மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி, திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர்…
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்
– அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு – வந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர்…
தீவரைவு – ஆவணப்படம் திரையிடல் – சென்னை
கருந்திணை தயாரிப்பில் பூங்குழலியின் இயக்கத்தில் தீ வரைவு ஆவணப்படம் திரையிடல் – சென்னை நாள் – ஆடி 18, 2045 -ஆகத்து 3, 2014, ஞாயிறு – மாலை 5 மணி இடம் – கவிக்கோ அரங்கம், இரண்டாவது முதன்மைச் சாலை, ந.மே.க.குடியிருப்பு (சி. அய். டி. காலனி) இசைக்கழகம் (மியுசிக் அகாடமி) அருகில், மைலாப்பூர், சென்னை நமதுபண்பாட்டில் உறவுகளை நிலைநிறுத்துவதற்கும், புதிய உறவுகளைஉருவாக்குவதற்கும் திருமணம்ஒரு முக்கிய களமாக இருக்கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, சாதியையும் நிலைநிறுத்திவருகிறது. பலநூற்றாண்டுகளாக சாதிக்குள் நாம்ஏற்படுத்திக்கொள்ளும் மண…