இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம் – தொடர்ச்சி) தமிழர் வீரம் இசைக்கருவிகள் போர்க்களத்தில் வீர வெறியூட்டும் இசைக்கருவிகள் பல இருந்தன. பறையும் பம்பையும், திட்டையும் தடாரியும், முழவும் முருடும், கரடிகையும் திண்டியும் அத்தகைய கருவிகள்.12 அவற்றின் பெயர்கள் ஒலிக் குறிப்பால் அமைந் தனவாகத் தோன்றுகின்றன. பம்பம் என்று ஒலிப்பது பம்பை; முர்முர் என்று ஒலிப்பது முருடு; கரடிபோல் கத்துவது கரடிகை. இவ்விசைக் கருவிகள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் பொழுது வீரரது தலை கறங்கி ஆடும்; நரம்புகளில் முறுக்கேறும்; போர்…