இசைக்கலையை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றனர் -ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 36/ 69 இன் தொடர்ச்சி)
கருநாடக இசை என்பது தமிழிசையின் பிற்கால வளர்ச்சியே
நம்நாட்டில் மிகப் பழமையானது, தொன்மைச் சிறப்பு வாயந்தது என்று போற்றப்படுவது தென்னாட்டுக் கருநாடக இசையாகும். ஆனால் இக்கருநாடக இசையின் வரலாற்றினை நடுநிலையான உள்ளத்தோடும், நெறியுடனும் ஆராய்ந்து நோக்கினால், அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலே தோன்றி பண்டைய தமிழர்களால் அரும்பாடுபட்டு வளர்ந்த ஓர் இசை முறையின் பிற்காலத்துப் பரிணாம வளர்ச்சி என்று நன்கு விளங்கும். – முனைவர் சு.சீதா: தமிழகக் கலைச் செல்வங்கள்: இசைக்கலை: பக்கம்.86