செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்

‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும்  தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி  இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா,  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும்  படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது.  தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை  அவையோர் இருந்து  களித்து மகிழ்ந்தமை…

துபாய் (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம்

துபாய் :  துபாய்   (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.   அதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி கடந்த 2 ஆம்  நாள் கல்ஃப்   முன்முறைப் பள்ளியில் நடை பெற்றது. ,,சிறுவர் சிறுமிகள் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளையும் வாசித்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். மேலும் இங்கு தொடர்ச்சியாகப் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களில் சில பதிவிசை(கரோக்கி)யுடன் இணைந்து பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். மேலும் இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள்  ஐதர்,  மற்றும் …