(அதிகாரம் 049. காலம் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 050. இடன் அறிதல் வலிமையை, காலத்தை, ஆய்ந்தபின்,  உரிய இடத்தைத் தேர்ந்துஎடுத்தல்.   தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க முற்றும்,       இடம்கண்ட பின்அல் லது.         எந்தச் செயலையும் இகழற்க;         இடத்தைக் கண்டபின், தொடங்குக.   முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண்சேர்ந்(து)ஆம்       ஆக்கம், பலவும் தரும்.    வலியார்க்கும், கோட்டையின் பாதுகாப்பும்         நன்மையும் நல்இடம்தான் தரும்.   ஆற்றாரும், ஆற்றி அடுப; இடன்அறிந்து,…