தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…

இலக்கணச் செம்மல் இலக்குவனார் – இடைமருதூர் கி.மஞ்சுளா

இலக்கணச் செம்மல் இலக்குவனார் தினமணி 17.05.09   “இன்று யார் யாரோ புரட்சி என்ற அடைமொழியுடன் வருகிறார்கள். ஆனால், உண்மையிலேயே ஒரு தமிழ்ப் புரட்சியை நடத்தியவர் பேராசிரியர் இலக்குவனார். கல்லூரி ஆசிரியர் கூட்டத்தில், கல்லூரி முதல்வர் ஆங்கிலத்தில் பேசமுற்பட்டபோது 150 பேராசிரியருள் தைரியமாக எழுந்து நின்று “என்னருமைத் தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ் என்பதைக் கல்லூரி முதல்வர் அறிவாரா?’ என்று கேட்டு புரட்சி செய்த பெருந்தகை முனைவர் இலக்குவனார்” என்று போற்றுகிறார் கி.வேங்கடசுப்பிரமணியம்.  “எழுதுவதற்கு ஏடும் பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ்ப் பரப்ப” என்பது…