தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 210 : நடந்தார் வாழி காலுடுவெல்! – தொடர்ச்சி) ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும் இனிய அன்பர்களே!தேரிக்காடு என்று முதன்முதலாக எப்போது கேள்விப்பட்டேன், தெரியுமா? கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கரும்பொன்ம ஈரயிரகை (Titanium dioxide) ஆக்கம் செய்யும் தொழில் அமைக்க (இ)டாடா குழுமம் மாநில அரசோடு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது. தேரிக்காட்டில் கடலோரத்திலிருந்து தொடங்கி பலநூறு சதுரக்கல் பரவிக் கிடக்கும் தாது மணலைத் தோண்டியள்ளி வேதிச் செயல்வழிகளின் ஊடாகப்…
தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை”
(தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் – தொடர்ச்சி) “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” இனிய அன்பர்களே! இரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முதலில் எப்போது படித்தேன்? அறிஞர் அண்ணாவின் சொல்வன்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்வைச் சொல்வதுண்டு: ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொது மேடையில் இரா.பி. சேதுப்பிள்ளை அண்ணாவிடம், “எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?” என்று கேட்டார்.. “பேசுவேன்” என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் “ஆற்றங்கரையினிலே” என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். ‘அண்ணா எப்படிப் பேசுவாரோ?’ என…
தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்
(தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும் காலுடுவெல் இல்லம் – தொடர்ச்சி) இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் இராபருட்டு காலுடுவெல் குறித்தும் அவரது மொழியியல் ஆய்வு, அதன் முடிவுகள் குறித்தும் அண்மைக் காலத்தில்தான் நிறைய படித்தேன். அரசியல் வகுப்புக்காகப் படித்தமையால் சற்று ஆழ்ந்தே படித்தேன் எனலாம். மொழிநூல் அறிஞர் காலுடுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை ஆண்டார் என்ற ஒரே காரணத்துக்காக உடனடி அரசியல் தேவைகளுக்காக அவரைக் கொச்சைப்படுத்தும் போக்குகள் தலைதூக்கியிருக்கும் இத்தருணத்தில் காலுடுவெல்லை முறையாக அறிந்து கொள்வதும் அறியச் செய்வதும் தேவை எனக் கருதுகிறேன்….
தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு – தொடர்ச்சி) கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! நெல்லை வரும் போதெல்லாம் சுடலைமாடன் தெருவில் தோழர் தி.க.சி.யைப் பார்த்துப் பேசாமல் திரும்ப மாட்டேன். என்னோடு உரையாடும் அந்தக் குறுகிய நேரத்தில் தன் மகிழ்வுகளையும் மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்து விடுவார். அவரது மனநிலையை அகவை முதிர்ந்த தந்தை தன் மகன் போன்ற ஒருவரைப் பார்க்கிற உணர்வு என்று சொல்ல முடியாது. நான் நெல்லை வரும் செய்தி கிடைத்ததிலிருந்தே வழி மேல் விழி வைத்து என்னை…