8  ஙூ.) தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்:   இணையம் வழியாகத் தமிழ் வளர்ப்பதற்குக் கணிணியில் தமிழ்ப்பயன்பாடுகள் பெருக வேண்டும். இதற்கெனத் தமிழக அரசே, ‘தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்’ ஒன்றை அமைக்க வேண்டும்.   ‘தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம்’ / ‘தமிழகக் கணித் தமிழ் மன்றம்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் இணைய வழியிலான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கென ஓர் அமைப்பு இன்றியமையாது வேண்டப்படுகின்றது.   ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ என்னும் அமைப்பு இருக்கும்பொழுது வேறு தேவையா என்ற எண்ணம் எழலாம். அந்த அமைப்பு…