ச.வே.சேகரைத் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தில் கைது செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
ச.வே.சேகரைத் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தில் கைது செய்க! மதுரையில் நிருமலா தேவி என்னும் கல்லூரி ஆசிரியை, மாணாக்கியரை ஒழுக்கக் கேடான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்காவலில் உள்ளார். இது தொடர்பில் உயர் அலுவலர்களுக்கும் பங்கு உண்டு என்று அவர் மூலம் தெரிய வந்த பொழுது தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து மீதும் குற்றச் சாட்டு புகைந்தது. தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என விளக்க ஆளுநர் செய்தியாளர் கூட்டம் நடத்தினார். தன் மீது களங்கம் இல்லை எனக் கூற வந்தவர் கூட்டத்தில் பெண்களிடமிருந்து…