தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் வரும் வெள்ளிக்கிழமை ஆவணி 31, 2047 / 16.09.2016 அன்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற உள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுக்கின்றது.