தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! – கோ. நடராசன்
தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! முந்து தமிழ் மொழி மறந்தான் முன்னோரின் வழி மறந்தான் மண்ணின் மரபிழந்தான் மான மென்றால் எதுவென்றான்-உயிராம் நீரின் உரிமை இழந்தான் மண்ணுரிமை பேணுதற்கு முன்னுரிமை தர மறந்தான் – வள்ளுவன் போதித்த பொன்னான கருத்திழந்தான் கடல் கடந்து வணிகம் செய்த கன்னல் நிகர் மொழி இனத்தான் – இன்று ஆதி புகழ் மறந்து அயலான் கால் நக்கி அடி பணிந்து அழிகின்றான் இந்து என்றும் இந்தியன் தானென்றும் திராவிடன் என்றும் தலித்திய னேயென்றும் தடம் மாறிப் போன…
எப்படி விடுதலை நாளாகும்? – ஆ.சு.மணியன்
எப்படி விடுதலை நாளாகும்? வாழ்க்கையில் குறையில்லாத மனிதனில்லை. சில குறைகளை முயன்றால் போக்கிவிடலாம். குறை என்னவென்று சொன்னால்/முறையிட்டால்தானே தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம். உலக அளவில் தமிழன்மட்டும்தான் தாய்மொழியில் குறையைச் சொல்ல/முறையிட முடியாது என்றால் எப்படி விடுதலை நாளாகும்? இரண்டாம் உலகப்போரில் மொழிவழிவிடுதலை வழங்கப்பட்டன. ஆனால் உலகின் முதன்மொழியான செம்மொழித்தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்கள் தமிழர்நாட்டில் இருக்கின்றனர். உலகின் அனைத்து நாட்டிலும் தமிழர் இருக்கிறனர். ஆனால் தமிழுக்கும் தமிழனுக்கும் விடுதலை இல்லை. உலகப்பொதுமறை வழங்கிய இலக்கிய இலக்கணமுடைய தமிழில் குறையை முறையிடும் உரிமை வழங்கப்படவில்லை…