தமிழ்ப்பாரதம் – இந்தியாவா? பாரதமா? – 1 தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(இந்தியாவா? பாரதமா? – 1 தொடர்ச்சி ) தமிழ்ப்பாரதம் முந்தைய கட்டுரையில் பரதம் அல்லது பாரதம் என்பது தமிழ்ச்சொல் எனக் கூறியிருந்தோம். இதற்கான தமிழிலக்கிய மேற்கோள்களையும் காட்டியிருந்தோம். இன்று வரையுள்ள அனைத்து மேற்கோள்களையும் காட்டினால் பக்கங்கள் பெருகும். “பாரத நாடு பழம் பெரும் நாடு, பாரதப் பூமி பழம்பெரும் பூமி, பாரத நாடு பார்க்கெலாம் திலகம், பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?, பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர், வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவார், வாழிய பாரத மணித்திரு நாடு,…